சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் இன்று மர்மபொருள் வெடித்து மேற்கூரை தகரம் பறந்து வந்து விழுந்தது. இதில் நியமித்துக்கலா என்பவர் உயிரிழந்தார். மர்மபொருள் வெடித்து தகரம் விழுந்து படுகாயம் அடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் நிலைய வளாகத்தில் கழிவுகளை எரித்தபோது மர்மபொருள் வெடித்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் சேலம் எஸ்.பி. அருண் கபிலன் ஆய்வு மேற்கொண்டார். வெடித்த பொருள் எது என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:மர்ம பொருள் வெடிப்பு