தஞ்சை பகுதியில் ஆறுகளில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வெண்ணாறு தெற்கு கரை சுடுகாடு சாலை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மாட்டு வண்டியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த மாட்டு வண்டியில் அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கரந்தை கொடிக்காலூர் பகுதியைச் சேர்ந்த கூத்தையன் என்பவரின் மகன் துரைப்பாண்டி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்தனர்.