தமிழ்நாட்டில் தற்போது மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மணல் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் அதிகாரிகள் ரூ.4 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர். மணல் விற்பனைக்கு இன்வெஸ்டிகேட்டர் என்ற செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது மணல் விற்பனைக்கான அரசாணை எண் 4ஐ அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜூன் 3வது வாரத்திற்குள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.