Skip to content
Home » மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

மணல் குவாரி வழக்கு…. EDக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில்  திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர் உள்பட 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில்  விதிகளுக்கு புறம்பாக மணல் எடுத்ததாக கூறி  அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  மாவட்ட கலெக்டர்கள் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று  மணல் குவாரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள்  அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த ஆவணம் இல்லை, அந்த ஆவணம் இல்லை என பொத்தாம் பொதுவாக  கூறக்கூடாது.  மணல் குவாரி வழக்கை நாங்கள்  முடிக்க விரும்புகிறோம், நீதிமன்ற நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்  என அமலாக்கத்துறையை சாடிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையையும்  நிராகரித்த நீதிபதிகள்,  வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.இதனால் அமலாக்கத்துறை அதிர்ச்சியில் உறைந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!