தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா கடந்த சில நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அரசு சார்பிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட சனாதனத்தை போற்றும் பொங்கல் விழாவில் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் பங்கேறார். சனாதனத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் சனாதனத்தை போற்றும் பொங்கல் என பெயரிடப்பட்டு பேனர் கட்டி நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொண்டது திமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
