தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே மணலூரில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது. இதில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பங்கேற்று சமுதாயக் கூடத்தை திறந்து வைத்தார். இதில் திமுக தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், மனித நேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி பாதுஷா, எம்.எல்.ஏ நேர்முக உதவியாளர் ரிபாயி, ஒப்பந்தத்தாரர் முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணி கண்டன், ஊராட்சித் தலைவர் பாண்டியன், முன்னாள் தலைவர் ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் நெல் கொள்முதல் நிலையம், பகுதி நேர ரேஷன் கடை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப் பட்டன. இதேப் போன்று வழுத்தூர் பூக் கொல்லையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட சிறு பாலத்தையும் பாபநாசம் எம். எல். ஏ ஜவாஹிருல்லா திறந் து வைத்து வைத்தார்.
சமுதாயக் கூடம் திறப்பு விழா.. பாபநாசம் எம்எல்ஏ திறந்து வைத்தார்..
- by Authour