இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள்
கொண்டாடுகின்றனர்.கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் துவங்கியது. இதையொட்டி உலகப் புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. பேராலயத்தில் நடைபெற்ற 40 நாள் தவக்காலம் சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழக்கமாக நெற்றியில் சாம்பல் பூசபட்டு 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்..