Skip to content
Home » சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை மிதந்து கொண்டிருந்தது. இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. எப்படி இறந்தார்? என்றும் தெரியவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் டோல்கேட்போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அய்யன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருப்பதால் நடந்து செல்பவர்கள் கூட தடுமாறி விழும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த இடத்தில் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் மற்றும் இருசக்கர வாகனம் கார்கள் சென்று கொண்டு இருப்பதால் எந்நேரமும் இந்த ஆற்றுக்குள் விழும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் செல்பவர்கள் தரையோடு தரையாக இருக்கும் இந்தப் பாலத்தை கடக்கும்போது வெகு கவனமாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது .உடனடியாக இந்த பாலத்திற்கு தடுப்பு கட்டைகள் அமைத்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.