திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள விக்னேஷ் வித்யாலயா செகண்டரி பள்ளி மாணவி யாழினி
கர்நாடக மாநிலம் கூர்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்தினர்.
கர்நாடக மாநிலம் கூர்கில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி -2023 போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தொடங்கி 2 தினங்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா
மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் இப் போட்டியில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சார்பில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி போட்டியில் பங்கேற்றார்.
இதில் தனித்திறமை பிரிவான ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, குத்து வரிசை, மான் கம்பு, வாள், வாள் – கேடயம், சுருள் ஆகிய பல போட்டிகள் நடைப்பெற்றது. இதில் தமிழகம் சார்பில் போட்டியில் பங்கேற்ற சமயபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி யாழினி ஒற்றைக் கம்புப் போட்டியில் தங்கமும், இரட்டைக் கம்பில் போட்டியில் வெள்ளி பதக்கங்களை வென்று சொந்த ஊருக்கு திரும்பினர்.
தங்கம்,வெள்ளி வென்று மண்ணிற்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவிக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.