சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையாதுமான திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனாக காணிக்கை உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்றும், மீறி
எடுத்து செல்பவர்கள் செல்போனில் பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் இணை ஆணையர் உத்தரவின் பெயரில் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் முன்பு இரும்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பெயரளவுக்கு வைக்கப்பட்ட பலகையை கோவில் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு பலரும் தங்கத்தேர் வரும்போது செல்போனில் படம் பிடித்தனர். கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் முன்பு உள்ள நுழைவாயில் வரும் பக்தர்களிடம் கோவில் ஊழியர்கள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு இதுபோன்று நடந்து கொள்வதால் கோவில் நிர்வாகமே பெயரளவுக்கு அறிவிப்ப பலகை வைத்துவிட்டு பணம் பெரும் நோக்கில் இதுபோன்ற செயல் ஈடுபட்டு வருவதால் இதனை தடுக்க வேண்டும் எனகோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.