சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்வார்கள்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி 18 பெருக்கான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்தியும், காவடி எடுத்தும், காணிக்கைகள் உண்டியலில் செலுத்திய வேண்டுதலை
நிறைவேற்றி செல்வார்கள். ஒரு சில பக்தர்கள் தங்க தேரை இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் ஆடிப்பெருக்கான இன்று தங்க தேரில் உற்சவர் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் நினைத்ததை நிறைவேற்றும் விதமாக கோவில் உட்பிரகாரத்தில் தங்க தேரை இழுத்து வழிபட்டனர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் இணையானைய கல்யாணி தலைமையில் ஊழியர்கள் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.