திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலக மக்களைக் காப்பதற்காக அம்மன் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும்.
ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அம்மனுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூராம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அரிசி மாவு, சந்தனம், பால், பன்னீர், தயிர், கரும்பு ஜூஸ்,
லெமன், சாத்துக்குடி, சந்தன தைலம்,மஞ்சள் பொடி,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் உள்ளிட்ட 22 வகையான அபிஷேக பொருள்களால்
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து மகா தீபாதாதரனை நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாக்களில் முதல் திருவிழா ஆடிப்பூரம் என்பதும் இதனைத் தொடர்ந்து தான் மற்ற திருவிழாக்கள் மாரியம்மன் கோவில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.