திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்ல அது வெளி மாநிலங்களில் இருந்தும் அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வர்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன் படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா கடந்த 12 ந்தேதி தொடங்கியது.
மும்மூர்த்திகளை நோக்கி மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காகவும், இத்திருதலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல
சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாரி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பம்சமாகும். வருடம்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு கிழமை வரை அம்மன் விரதம் இருப்பது இக்கோவிலின் தனிப்பெரும் சிறப்பாகும்.
இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இந்நிலையில் 3 வது வார பூச்சொரிதல் விழாவான இன்று திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் 28 ம் ஆண்டாக சமயபுரம் காவல் நிலையத்திலிருந்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,ஏடிஎஸ்பி,டிஎஸ்பி சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் யானை குதிரை ஊர்வலத்துடன் தட்டுகளில் பூக்களை ஏந்தி, தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாத்தினர். இன்று 3வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் விழாக்கோலம் பூண்டது.