மதுரை மாவட்டம், சிலைமான் சர்வே சிட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான துளசிராஜன். இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் பைக்கில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கூத்தூர் பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துளசி ராஜாவை கத்தியை காட்டி மிரட்டி 13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பணம் ரூ.20, 900 மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் துளசிராஜன் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். போலீசாரின் தேடுதல் வேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்டது மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி மேலத் தெருவைச் சேர்ந்த 20 வயதான கௌசிக் என்ற இளைஞர் என தெரிவந்தது. பின்னர் இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த கொள்ளிடம் காவல் உதவி ஆய்வாளர் திருமதி காயத்திரி கௌசிக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
மற்றோருவரை போலீசார் தேடி வருகின்றனர்.