ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டும் உள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வார்கள்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று மாலை வருகை தந்து சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேரை துர்கா ஸ்டாலின் இழுத்தார். இதனைத் தொடர்ந்து 51 சுமங்கலி பெண்களுக்கு தாலி உள்ளிட்ட மங்களப் பொருட்களை வழங்கினார்.