பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு மாதம் பௌணர்மி நாளில்108 திருவிளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினத்தன்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த 108 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு 22 வகையான பொருள்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ளும் பெண்கள் ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் ஆதார் கார்டு ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று, பணம் செலுத்தும் போது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும்,மேற்கண்ட பொருட்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பூஜையில் புதிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கோயில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.
