திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அப்பாஸ் அலி.இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகம் சன் ஆட்டோ மற்றும் மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் கடையில் இருந்த மின் ஓயரில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும்
சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் சூசை மைக்கேல்ராஜ் வீரர்கள் திவாகரன், கார்த்திக் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சில மணி நேரம் போராடி தீயணைத்தனர். மேலும் தீ அக்கம்பக்கம் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தினால் கடையில் இருந்த பொருள்கள் தீயில் எறிந்து சேதமானது.