திருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் செயல் அலுவலர் சந்திரகுமார் அறிவித்துள்ளனர்.
கண்ணனூர் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையம் மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் 6 ம் தேதி புதன்கிழமை மாலை முதல் 7 ம் தேதி வியாழக்கிழமை மாலை வரை ச.கண்ணனூர் பேரூராட்சி பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார் தகவல் தெரிவித்துள்ளனர்.