Skip to content

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று ஆரம்பம்..

  • by Authour

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மற்றும் சித்திரை தேர்த் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்,நொடிகள், தீவினைகள் அணுகாது,சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும். இந்த புராண வரலாற்றின் அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் மாரியம்மனுக்கு அந்த 28 நாட்களும் தளிகை, நைவேத்தியங்கள் படைக்கப்படாது. மாறாக, இளநீர், நீர்மோர், பானகம், கரும்புச் சாறு, துள்ளுமாவு போன் றவை மட்டுமே படைக்கப்படும். இந்த ஆண்டுகான பூச்சொ ரிதல் விழா இன்று தொடங்கியது. இன்று அதிகாலையில் விக்னேஸ்வர பூஜை ,புண்ணியாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்கியது.இந்நிலையில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பக்தர்கள்,கோயில் பணியாளர்கள் பூக்களை,தட்டுகளிலும்,கூடைகளிலும் சுமந்து கொண்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!