திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் அம்மையப்பர் பகுதியில் அமைந்துள்ள சாய் சிட்டியில் ஐந்து வீட்டில் பூட்டை உடைத்து அடுத்து அடுத்து மூன்று வீட்டின் பீரோவை உடைத்து பணம் நகை உடைமைகளை மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்.
மாடக்குடி பகுதியில் உள்ள சாய் சிட்டி பகுதியில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து தொடர்ந்து 5 வீட்டின் பூட்டை உடைத்து விட்டு மூன்று வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கிறது
சாய் சிட்டி பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி மீனாட்சிசுந்தரம் நேற்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஒன்றரை பவுன் தங்கம் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போனது.
அதே பகுதியை சேர்ந்த சங்கர் அவரது தாயார் பரமேஸ்வரி இருவரும் தனியாக வசித்து வந்தனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கர் வெளிநாட்டிற்கு சென்ற நிலையில் அவரது தாயார் மட்டும் பள்ளிவிடையில் உள்ள சாய் சிட்டி நகரில் தனியாக வசித்து வந்தார் நேற்று நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அதனை அறிந்த கொள்ளையர்கள் வீட்டில் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜன் மகன் சாய் குமார் வயது (57)என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 20ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
உறவினர் வீட்டிற்கு சென்ற மீனாட்சி சுந்தரம் இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார்
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர் பின்னர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது.இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மேலும் அதே பகுதியில் யாரும் இல்லாத இரண்டு வீட்டில் பூட்டை உடைக்கப்பட்டு திருடர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்கள் நன்கு அறிந்த நபர்களாக தான் இருக்கக்கூடும் குறிப்பாக எந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தான் இந்த திருட்டை அரங்கேற்றி இருக்கிறார்கள் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.