திருச்சி மாவட்டம் சமயபுரம் கடைவீதி சந்தை கேட் பகுதியில் உள்ள டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
சமயபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிற்கு ரகசிய தகவல்
கிடைத்தது. தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சமயபுரம் கடைவீதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது சமயபுரம் கடைவீதி சந்தைகேட் பகுதியில் உள்ள 2 டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு விற்பனைக்கு கடையில் வைத்திருந்த குட்கா பொருட்ள்கள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோன்களை சோதனை செய்தபோது 8 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இரண்டு கடைகள் மற்றும் பதுக்கி வைத்திருந்த குடோன் ஆகியவற்றிற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது.