திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, அனைத்து தரப்பினருக்கும் ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து மற்றும் பக்தர்களுக்கு பருத்தி புடவை வழங்கும் விழா நடைபெற்றது.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து தரப்பினருக்கும்
ஏற்றத்தாழ்வின்றி பொது விருந்து நடைபெற்றது. இந்த பொது விருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார் அப்போது பக்கத்தில் இருந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் பக்தர்களுக்கு பருத்திப் புடவைகளை மாவட்ட ஆட்சியர்வழங்கினார்.
இந்த பொது விருந்தில் வடை பாயாசம் அப்பளம் கேசரி கூட்டு பொறியலுடன்7 50 பேருக்கு விருந்தளித்தனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு புடவைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பிரகாஷ், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன்,இந்து சமய அறநிலையத்துறை மண்டல துணை ஆணையர் லட்சுமணன், மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அருள் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கோயில் பணியாளர்கள் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.