திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சி ரயில் ஸ்டேஷன் எதிரே ரமேஷ் கார்டனில் வசித்து வருபவர் செல்வராஜ்(50) இவரது மனைவி கண்மணி(45). உள்ள வேப்ப மரத்தில் கடந்த 3 மாதமாக தொடர்ந்து பால் வடிந்து வருகிறது. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள் வேப்பமரத்தை வணங்கிச் செல்கின்றனர். செல்வராஜ் தீவிர திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். இவரது வீட்டில் உள்ள வேப்பமரத்தில் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து பால் வடிந்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக அதிகமாக பால் வடிந்து வருகிறது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி பூஜைகள் செய்து வணங்கி செல்கின்றனர்.