அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற திட்ட பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் தரேஷ் அகமது ஆய்வு மேற்கொண்டார்.
முதல் கட்டமாக செந்துறை சமத்துவபுரத்தில் தனது ஆய்வு பணிகளை தொடங்கினார். வீடு வீடாக சென்று சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் சமத்துவபுரம் ஒரு மாதிரி குடியிருப்பு பகுதியாக உருவாக்கப்பட வேண்டும் அதற்கான அனைத்து
முயற்சிகளையும் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட வீடுகளையும் புதுக்கப்படாத வீடுகளையும் புதுப்பிக்க படாத வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிலர் சமத்துவபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து இயக்குநர் திடீரென ஒரு வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த வீட்டில் உள்ள மூதாட்டி இடம் குடிதண்ணீர் கொடுக்கும்படி கேட்டார். அவர் தயங்கும் நிலையில் தண்ணீரை சோதிக்க வேண்டும் கொடுங்கள் என்றவுடன் அவர் எடுத்து வந்து கொடுத்தார்.
அதனை வாங்கி குடித்து சோதனை செய்த இயக்குநர் தரேஷ் அகமது தண்ணீர் உப்பு இல்லாமல் தரமாக உள்ளது. மேலும் சமத்துவபுரம் பகுதிக்கு தேவையான கூடுதல் வசதிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி செய்வார் என்று குடியிருப்பு வாசிகளிடம் கூறி சென்றார்.
தமிழக ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் தரேஷ் அகமது திடீரென குடியிருப்பு வாசிகளிடம் தண்ணீர் வாங்கி குடித்து ஆய்வு செய்தது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.