Skip to content
Home » சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை : திருமாவளவனுக்கு கமல் வாக்கு சேகரிப்பு..

  • by Authour

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேசியதாவது:

எழுச்சித்தமிழர் அன்பு தம்பி திருமாவளவன்.

கூட்டணி கட்சியினரின் பெயரை ஒரே மூச்சில் பேசி பானையை திரும்பிவிட்டார் திருமாவளவன். எல்லா சித்தாந்தாங்களும் மக்களுக்காக தான். அதற்காக தான் நாங்கள் அனைவரும் தோலுரசி களம் கண்டுள்ளோம்.

பாஜக ஒன்றிய அரசல்ல- மக்களோடு ஒன்றாத அரசு. குரலற்றவர்களின் குரலாக  பெருஞ்சிறுத்தை திருமாவளவன் திகழ்கிறார்.

இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிஞர்கள் கவலைப்படுவார்கள்.

நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆகவேண்டும். நாங்கள் தியாகம் செய்யவில்லை வியூகம் செய்துள்ளோம். இன்றைய தேவையை அன்றே உணர்ந்து வந்தவர் திருமாவளவன். திருமாமணி மலரில் என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அதில் நான் திருமாவளவனுக்கு தன்னிகரில்லா தலைவர் என்று தலைப்பிட்டேன். மானுட சமூகம் பின்னோக்க இழுக்கப்படும் தன் வாழ்வை சமூகத்திற்கு கொடுத்தவர்.

தன்னிகரற்ற தலைவர் பெருச்சிறுத்தை.

எதிரிகளை ஜனநாயகப் படுத்துவது என்றால் எதிரிகள் யாருமில்லை என்று உணர்வதுதான். சாதியம் தான் என் வாழ்வின் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். இன்னும் எத்தனை பேர் அடிமை விலங்கொடு உள்ளனர் என்பதை அறியவே

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு  என்று விளக்கம் அளித்தார்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சனாதனவாதிகள் பதறினார்கள்.

மண்டல் கமிஷன் மற்றும் விபி சிங் அதனை அமல்படுத்த முயன்றபோது அதனை தடுக்க முயன்றவர்கள். தமிழக மீனவர்கள்‌ காக்கத்தவறிய அரசி இந்த பாஜக அரசு. தமிழக மீனவர்களின் படகுகள் சிறைப்படுத்தி ஏலம்விடும் பழக்கம் இன்று நடைமுறையில் இருக்கிறது. 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சனையில் ஆதார விலையை தராமல் ஆதரவு விலையை தருவதாக கூறினார்கள் எதையும் செய்யவில்லை.

இதனை எதிர்த்த விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் குண்டு வீசியும் அணிப்படுக்கையும் அமைத்து எதிரயைப்போல நடத்தினார்கள். நான் நகரத்தில் இருந்தாலும் தினமும் சோறு சாப்பிடுகிறேன் அந்த நன்றிக்கு இன்று பேசுகிறேன்.

2 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள் ஆனால் ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை. காப்ரோட் கம்பெனிகளுக்கு மலிவுவிலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் முறை தான் தேர்தல் பத்திரத்திட்டம். தொழிலதிபர்களை வழிக்கு கொண்டுவர அமலாக்கத்துறை வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக ஏவி வருகிறது. தமிழர்களின் குரலாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருமாவளவன் ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர் திருமாவளவன். சமத்துவம் அரசியல் சமையலுக்கு உகந்த பானை. தொல்.திருமாவளவனை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கமலஹாசன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *