சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அனைத்து அரசுஅலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலமையில் உறுதிமொழி ஏற்பு நடந்தது.
அதுபோல புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திலும் இன்று சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமையில் அனைத்து அலுவலர்களம் இதில் கலந்து கொண்டனர். நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை
அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப் கூற அதை அனைவரும் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியல் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.