கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. 48 வார்டு கொண்ட கரூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக பல வண்ண கோலப்போட்டிகள் நடைபெற்றது. இதில் பொங்கல் பானை, கரும்பு, உதயசூரியன் உள்ளிட்ட ஓவியங்களுடன் சிக்கல் கோலங்கள், பலவண்ண புள்ளி கோலங்கள், ரங்கோலி உள்ளிட்ட வகைகளில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் போட்டி போட்டு கோலம் போட்டனர்.
இதேபோல் புது பானையில் புத்தரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் கலந்து, பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து “பொங்கலோ பொங்கல்” என்று உரத்த குரலில் முழங்கி குலவை யிட்டனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இணைந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
சமத்துவ பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.