தீவிர உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் நடிகை சமந்தா. மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த கடந்த ஆறு மாதங்களில் கூட உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தார். ‘புஷ்பா’ படத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி ஆட்டம் போட்ட ‘ஊ சொல்றியா’ பாடல் ஹிட்டான சமயம் அது. அவரிடம், ‘கவர்ச்சி, ஆக்ஷன் இரண்டில் எது பிடிக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எனக்கு ஆக்ஷன் தான் எளிதாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருக்கிறது. கவர்ச்சியாக நடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்’ என சொன்னார் சமந்தா.
அந்த அளவுக்கு உடற்பயிற்சியை விரும்பி செய்யக் கூடிய சமந்தா தற்போது, தனது ஒருநாள் காலைப்பொழுது எப்படி இருக்கும் என்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், மாஸாக பவர் கிக்குடன் தனது நாளைத் தொடங்கியுள்ளார். மேலும், தனது எடை, கொழுப்பு போன்றவை எவ்வளவு உள்ளது என்பதையும் மருத்துவ நோக்கத்திற்காக பரிசோதனை செய்துள்ளார். இதோடு பறவைகள், பூக்கள் என இயற்கை சூழலில் ரிலாக்ஸாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சினிமாவுக்கு கடந்த ஏழு மாதங்களாக பிரேக் விட்டிருந்த சமந்தா தற்போது சிகிச்சை முடிந்து தான் புத்துணர்ச்சியாக உணர்வதால் மீண்டும் சினிமாவுக்கு வர இருக்கிறார். உடல்நலன் சம்பந்தமாக ‘டேக் 20’ என்ற பாட்காஸ்டையும் தொடங்கி இருக்கிறார் சமந்தா. இதன் முதல் எபிசோட் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.