புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படம் 3டியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. மணிசர்மா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு நம்பவர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பு பணிகள் தாமதத்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிகாச காதலை பேசும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.