Skip to content

நடிகை சமந்தா கருகலைப்பு…..விவாகரத்து ஏன்?பகீர் தகவல்கள்

  • by Authour

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா படப்பிடிப்புகளில் பிசியாக பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யா 2017 ல் நடிகை சமந்தாவை திருமணம் செய்து நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக, அக்டோபர் 2021 ல் இருவரும் முறையாக விவாகரத்து செய்தனர்.

இவர்களின் விவாகரத்திற்கு பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் உமைர் சந்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் டுவீட் ஒன்று போட்டுள்ளார். அதில் அவர், “நாக சைதன்யா ஒரு மோசமான கணவர். அவர் சமந்தாவை சித்திரவதை செய்தார். இதனால் கர்ப்பமாக இருந்த சமந்தா கருக்கலைப்பு செய்து கொண்டார்” என்று கூறியுள்ளார். தற்போது உமைர் சந்துவின் டுவீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!