Skip to content

சமந்தா -தேவரகொண்டா நெருக்கம்… கடுப்பான மாஜி கணவர்…. ஓட்டம்

  • by Authour

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சமந்தாவும், விஜய்தேவரகொண்டாவும் ஜோடியாக நடித்துள்ள ‘குஷி’ படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான ‘பாய்ஸ் ஹாஸ்டல்’ என்ற தெலுங்கு படத்தை பார்க்க நாகசைதன்யா ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்று இருந்தார்.

படத்தின் இடைவேளையில் ‘குஷி’ படத்தின் டிரெய்லரை திரையிட்டனர். அதில் விஜய்தேவரகொண்டா, சமந்தா கட்டிப்பிடித்து நெருக்கமாக நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அந்த காட்சிகளை பார்த்து நாகசைதன்யா கடுப்பாகி ,  ‘பாய்ஸ் ஹாஸ்டல்’ படத்தை தொடர்ந்து பார்க்காமல் பாதியிலேயே தியேட்டரை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெலுங்கு பட உலகினர் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!