16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது
இங்கிலாந்து வீரர் சாம் கரணை வாங்க முக்கிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. பின்னர் சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் .ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த வீரருக்கும் இந்த அளவு பெரிய தொகை கிடைத்ததில்லை. சாம் கரண் இந்த ஆண்டு நடந்த உலககோப்பையில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்னொரு இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் 17.5 கோடிக்கும், பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.