பொன்னியின் செல்வன் நடிகை திரிஷாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய் ஜோடியாக லியோ படத்தில் திரிஷா நடித்துள்ளார். அஜித்குமாரின் விடாமுயற்சி படத்திலும் திரிஷாதான் நாயகி என்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபோல் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171-வது படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்கவும் திரிஷாவிடம் பேசி வருகிறார்கள். இந்த படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், விஷ்ணு வர்த்தன் டைரக்டு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. திரிஷா ஏற்கனவே காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து இருந்தார். அந்த படம் சரியாக போகவில்லை.