வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் இந்தியாவில்
ஹைதராபாத் பெங்களூரு மும்பை,குருகிராம்,புனே மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் 11,000 பணியாளர்களைக் கொண்டுள்ள உலகளாவிய முன்னணி நிறுவனமான
சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது,
இந்தியாவை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான நிறுவனத்தின் சேல்ஸ்ஃபோர்ஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோ மேஷனை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து தொழில்களின் வணிகங்களில் புதுமைகளை கொண்டு வருவதை நோக்கமாகவு ம் வாடிக்கையாளர் தொடர்புகளில் பெரும் மாற்றத்தையும் ஏ ஐ புரட்சி யின் தாக்கத்தை வணிகங்களில் ஏற்படுத்தியுள்ளது,
கூடுதலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் டி.என்.எஸ்.டி.சி. நான் முதல்வன் முயற்சியை ஆதரிப்பதில் சேல்ஸ்ஃபோர்ஸ் பெருமிதம் கொள்கிறது, இது ஆண்டுதோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை திறன்படுத்துவதை யும், பொறியியல் கல்லூரிகளில் 7வது செமஸ்டர் கிரெடிட் திட்டத்தின் ஒரு பகுதியாக 3,000 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு டெவலப்பர் பயிற்சியையும் வழங்குகிறது,
மேற்கண்ட தகவல்கைள சேல்ஸ்ஃபோர்ஸ் இந்தியாவின் ஏ வி பி கமல்காந்த்,
ப்ரொபல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஜிஎம் டாக்டர் ராமச்சந்திரன்,பி டபிள்யு சி இந்தியாவின் பங்குதாரர் ரோஹித் குமார் ,ப்ரீஸ்கேலின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அஜய் ஜெயகோபால் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.