கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர், தர்மபுரி, சேலம், கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணூருக்கு எக்ஸ்பி்ரஸ் ரயில் சென்றுகொண்டிருக்கிறது. நேற்று இரவு இந்த ரயில் தர்மபுரியை கடந்து சேலம்நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் ரயிலில் ஏறி ஒரே பெட்டியில் இருந்த 20 பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏற்காடு அடிவாரம் பகுதியில் ரயில் வரும்போது ரயிலில் இருந்து குதித்து தப்பி விட்டனர். ரயில் சேலம் வந்ததும் பயணிகள் ரயில்நிலைய போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.