Skip to content

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.

இன்று தனது மனைவியுடன்  தனது மாமனார் ஊரான திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு மாவட்டம்  பவானி அடுத்த சித்தோடு பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது இ்னொரு கார்  ஜானின் காரை துரத்தி வந்து மடக்கியது. ஜான் காரை நிறுத்தியதும்,  துரத்தி வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல், ஜானை சரமாரி வெட்டித்தள்ளியது.

இதில் ஜான் அந்த இடத்திலேயே இறந்தார். மனைவி கண் முன்னே 5 பேர் கொண்ட கும்பல் இந்த  கொலையை அரங்கேற்றியது.

 இது பற்றிய தகவல் அறிந்ததும்   சித்தோடு  இன்ஸ்பெக்டர்  ரவி மற்றும் ஏட்டு லோகநாதன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து வந்து கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். அப்போது கொலையாளிகள்  போலீசாரையும் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு லோகநாதன் ஆகியோருக்கு வெட்டு விழுந்தது.

உடனடியாக போலீசார் சுதாரித்துக்கொண்டு   கொலையாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  இதில் கார்த்திகேயன் உள்பட 3 பேருக்கு காலில் குண்டு பாய்ந்தது. மற்ற இருவரும் காரில் தப்பி ஓடிவிட்டனர்.

காயமடைந்த 3 கொலையாளிகள் மற்றும் போலீசார்  பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளிடம் விசாரணை நடக்கிறது.

.

error: Content is protected !!