சேலத்தில் இருந்து இன்று காலை தர்மபுரி மாவட்டம் அரூருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. சுக்காம்பட்டி சென்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் 2 பைக்குகளில் நின்றிருந்த 4 பேர் மீது பஸ் மோதியது. இதில் 4பேரும் அந்த இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணி, இன்னொருவர் பெண், இன்னொருவர் ஆண், மற்றும் ஒரு குழந்தை.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்து சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.