சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவருடைய பதவி காலம் இன்றுடன் முடிவதாக இருந்தது. இவர் பதவி ஏற்றபின்னர் இந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக குளறுபடி, ஊழல் தலைவிரித்தாடியது. விதி மீறல், என ஜெகநாதன் செயல்படுவதாக அங்குள்ள பேராசிரியர்கள், ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இவருக்கு கவர்னரின் ஆதரவு இருப்பதால் எதைப்பற்றியும் அவர் கலைப்படவில்லை.
இந்த நிலையில் ஜெகநாதனுக்கு மேலும் ஒருவருடத்திற்கு பதவியை நீட்டித்து கவர்னர் ரவி உத்தரவிட்டு உள்ளார். வரும் 2025 மே 19ம் தேதி வரை இவரது பதவி காலத்தை நீட்டித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளதற்கு ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.