Skip to content
Home » சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

சேலத்தில் சோகம்…..பஞ்சர் பார்த்தபோது வெடித்து பறந்த டயர் விழுந்து ஒருவர் பலி…..

  • by Authour

சேலம் மாவட்டம் சங்ககிரி -பவானி பிரதான சாலையில் தீபம் லாரி பட்டறை என்ற பஞ்சர் கடையை மோகனசுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார், நேற்று மாலை லாரி டயருக்கு பஞ்சர்  ஒட்டியதும் காற்றடித்தார். அதிகமாக காற்று அடித்ததால் அழுத்தம்  காரணமாக   டயர் வெடித்து  பயங்கர சத்தத்துடன் வானில் 100 அடி உயரத்திற்கு  பறந்தது . வெடித்து மேலே எழும்பிய டயர்  பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்த  மோகனசுந்தரம் மீதும் தாக்கி மேலே எழும்பியது. இதில் மோகனசுந்தரம்  பலத்த காயம் அடைந்தார்.  அவர் ஆஸ்பத்திரியில்

சேர்க்கப்பட்டார்.

டயர் மேலே எழும்பியதை பார்த்து பயந்து  ராஜ்குமார் என்பவர்  ஓடினார். அப்போது மேலே எழும்பிய டயர் அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த டயர் வெடித்த விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *