தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி சாலையோர பழவண்டி, காய்கறி வண்டி உணவு, பூ வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சார்பில் தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அடையாள அட்டை வழங்கிட வேண்டும். வியாபார சான்றிதழ் வழங்கிட வேண்டும். அடையாள அட்டை போட்டோ எடுப்பதை தமிழ்நாடு முழுவதும் தனியாருக்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மூலமாக போட்டோ எடுத்து அடையாள அட்டை வழங்கிட வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு தரமான வண்டி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் மாநகராட்சி அலுவலக வாயில் முன்பு ஏஐசிசிடியு கௌரவ தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் பாஸ்கர், செயலாளர் அசாருதீன், துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.