பெரம்பலூர் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் இன்று (24.04.2023) நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தொடங்கி வைத்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இப் பேரணியானது மூன்று சாலை சந்திப்பு பகுதியில் தொடங்கி பாலக்கரை பேருந்து நிலையம் வழியாக சென்று நெடுஞ்சாலை துறை அலுவலகம் வ வந்து நிறைவு பெற்றது.இதில் 200க்கும் மேற்பட்ட சாலை
பணியாளர்கள் கலந்து கொண்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், வேகக் கட்டுப்பாடு, சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளையும் ஏந்தியும் நடந்து சென்றனர்.
சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் , தலைக்கவசத்தின் அவசியம் , சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி , உதவி கோட்டப்பொறியாளர்கள் (பெரம்பலூர்) மாயவேலு, (குன்னம்) தமிழ் அமுதன் ,(வேப்பந்தட்டை) பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.