தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அடுத்த சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில் சப்தஸ்தான விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணை கோயிலும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில். இக் கோயிலின் சப்தஸ்தான விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் விசேஷ அலங்காரத்தில் கொடி மரம் அருகில் எழுந்தருள, மேளதாளங்கள் முழங்க, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை நடைப் பெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அடுத்த மாதம் 7-ம் தேதியும், சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி 8-ம் தேதியும் நடக்கிறது.
