தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட 4 பேர் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியாகுமார், திருமலைமுத்து, எம்.செல்வராஜ் ஆகியோர் மாநில தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஷகில் அக்தர் கடந்த ஆண்டு சிபிசிஐடி டிஜிபியாக இருந்து பதவி ஓய்வு பெற்றார். கடைசியாக இவர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்தார்.
ஷகில் அக்தர் தர்மபுரி மற்றும் சேலம் டவுனில் உதவி போலீஸ் சூப்பிரெண்டாக பதவி வகித்தவர். தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு முன் இவர் சேலம் டவுன் ஏஎஸ்பியாக இருந்தவர். இவர் எஸ்.பியாக இருந்தபோது, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இமாம் அலி உள்பட 5 தீவிரவாதிகள் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தனர்.
இதை அறிந்த ஷகில் அக்தர் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் காய்கறி வியாபாரிகள் போல மாறுவேடத்தில் செயல்பட்டு தீவிரவாதிகள் 5 பேரையும் என்கவுன்டர் செய்தனர். ஷகில் அக்தர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.