இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் மிக நீண்ட கடற்கரை உள்ளது. தமிழ்நாட்டின் கடற்கரை சுமார் 1000 கி.மீ. தூரம் உள்ளது. 14 மாவட்டங்களில் கடல் உள்ளது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் வருடத்திற்கு 2 முறை சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்தும் இந்த சோதனையில் உள்ளூர் மீனவர்களையும் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இன்று சாகர் கவாச் ஒத்திகை இன்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி என 14 மாவட்டங்களிலும் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடததப்பட்டது. நாளையும் இந்த ஒத்திகை நடக்கிறது. கடற்கரை வழியாக செல்லும் வாகனங்களும் அப்போது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.