சென்னை எத்திராஜ் கல்லூரியில் உலக பெண்கள் தின விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள். மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை வாழ்த்துகிறோம். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் முதன்முதலாக கண்ணகிக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டார்கள். முடக்கப்பட்ட பெண்களை மீட்க தொடங்கப்பட்ட இயக்கம் திராவிட இயக்கம் . பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர்கள் பெண்கள் தான். இலவச பேருந்து சலுகை என்பது மகளிருக்கான உரிமை.
பெண்களை ஒதுக்கிவைத்து விட்டு எந்த நாடும் முன்னேறாது. தற்போதைய பெண்களின் முன்னேற்றத்தை காண பெரியார் இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமை திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு இப்போது இலவச பஸ் வசதி செய்து கொடுத்து உள்ளோம். அது இலவசம் அல்ல. பெண்களுக்கான உரிமை. இதன் மூலம் பெண்கள் குறைந்தபட்சம் மாதம் ரூ.600 முதல் 1200வரை சேமிக்கிறார்கள். பெண்களை ஒதுக்கிவைத்து விட்டு எந்த திட்டமும் செயல்படுத்த முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். பெண்களுக்கு என பல திட்டங்களை கொடுத்தது திமுக அரசு தான்.
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். இந்த விழாவில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரும் பங்கேற்றனர்.