ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில், ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை இழக்க, விராட் கோலி, சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, இன்றைய போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 2 முக்கிய சாதனைகளை முறியடிக்கும் முனைப்பில் நட்சித்திர வீரர் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.
அதன்படி, சச்சினின் 2 முக்கிய சாதனையில், முதல் சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 34 ரன்கள் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் ஆவார் என தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இப்போட்டியில் 34 ரன்களை அடித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் விராட். ஏற்கனவே, ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 7 முறை சச்சின் கடந்த நிலையில், தற்போது விராட் கோலி ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை (8வது முறை) கடந்து சாதனை படைத்துள்ளார்.