கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல சீசன் கடந்த 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ஆம் தேதி மாலை மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர் . மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வருகிற ஆயிரம் பக்தர்கள் தவிர உடனடி தரிசனத்திற்காக முன்பதிவு வசதியை தேவசம் போர்டு ஏற்படுத்தித் தந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் பம்பா முதல் சன்னிதானம் வரை ஜனவரி 11ம் தேதி முதல் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.