கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும். மகர ஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று மாலை 6.42 மணி அளவில் சன்னிதான கதவுகள் திறக்கப்பட்டது. அடுத்த சில நொடிகளில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளித்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் ராஜ அலங்காரத்தில் உள்ள ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.