Skip to content
Home » மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் நாளை முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்யும் மேல் சாந்திகள் சபரிமலை -அருண்குமார் நம்பூதிரி, மாளிகைபுறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து சன்னிதானம் முன் கொண்டு வருவார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு அவர் இவர்களுக்கு அபிஷேகம் நடத்தி முறைப்படியாக பதவி ஏற்க செய்யும் நிகழ்வு நடைபெறும். வேறு விசேஷ பூஜைகள் கிடையாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் திருவிதாங்கோடு தேவசம் போர்டு தீவிரமாக களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு போல பிற மாநில அரசுகள் குறை சொல்லும் அளவுக்கு நிலைமை செல்லாமல் இருக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பம்பையில் பக்தர்கள் மழை பாதிப்பு உள்ளிட்டவற்றால் சிரமப்படாமல் இருக்க ஏழு கியூ காம்ப்ளக்ஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பம்பை ராமமூர்த்தி மண்டபத்தின் அதே அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் புதிய பந்தல் கட்டப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்காக பம்பை மணல் பரப்பில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நிலக்கல் அல்லாமல் பம்பை ஹில் டாப் மற்றும் சக்குப்பாலத்தில் பார்க்கிங் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் வசதி கிடைத்துள்ளது. 18 படிகளுக்கு மேலே நகரும் கூரை பணியும் முடிந்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை நேரத்தில் படும் சிரமங்களை தடுப்பதற்காக வடக்கு பகுதியில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!