தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி கணினி ஆபரேட்டர்கள், தூய்மை காவலர், பள்ளி சுகாதார தூய்மை பணியாளர் அடங்கிய ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் இன்று தமிழ்நாடு முழுவதும் காத்தி்ருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி திருச்சியில் மாவட்ட தலைவர் எம். ஆர் முருகன் தலைமையில் மன்னார்புரம் செங்குளம் காலனி அருகில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல இணை ஆணையர் அலுவலகம் அருகில் காலை 11 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். P சம்பூரணம் முன்னிலையில் TM கிரேஸிஹெலன் வரவேற்றார்.
ஏஐடியுசி மாவட்ட தலைவர் நடராஜா போராட்டத்தை துவக்கி வைத்து பேசி்னார். மாநில பொதுச் செயலாளர் பெ. கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார்.
கோரிக்கைகள்
கிராம ஊராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் படி வெளியிட்ட அரசாணை 2.D எண் :62 படி கீழ்க்கண்டவாறு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசசிதழில் வெளியிட்ட நாள் முதல் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்
மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள்/ ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குபவர்கள் ரூபாய் 14503
தூய்மை காவலர் /பள்ளி சுகாதார தூய்மை பணியாளர்/ மகளிர் திட்ட தொழிலாளர்கள் ரூபாய் 12503
தூய்மை பணியாளர்கள் (12503க்கு குறையாமல் சிறப்புக்காலமுறை ஊதியம்) ரூபாய் 12503
சுகாதார ஊக்குனர்கள் ரூபாய் 15503
அனைத்து கணினி இயக்குரலுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணைய ஊதியம் ரூபாய் 28,650
வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூபாய் 56250
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊரக மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட அலுவலங்களில் உள்ள கண்காணிப்பாளர் (BDO)க்கு இணையான ஊதியம் ரூபாய் 84,150
ஆகிய சம்பளங்களை உயர்த்தி வழங்க வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்.